search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்க்கண்ட் கொலை வழக்கில் குற்றவாளிகளின் வழக்கு செலவை ஏற்கும் பா.ஜ.க. எம்.பி.
    X

    ஜார்க்கண்ட் கொலை வழக்கில் குற்றவாளிகளின் வழக்கு செலவை ஏற்கும் பா.ஜ.க. எம்.பி.

    ஜார்க்கண்ட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளின் வழக்கு செலவை ஏற்க உள்ளதாக பா.ஜ.க. எம்.பி. கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JharkhandLynching
    கோட்டா:

    ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டம் துல்லு கிராமத்தில் உள்ள சில வீடுகளில்  வளர்க்கப்பட்ட எருமை மாடுகளை காணவில்லை. அவற்றை பொதுமக்கள் தேடி வந்த நிலையில், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து புதன்கிழமை காலையில் மாட்டுடன் வந்த நபர்களை அப்பகுதி மக்கள் பிடித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த துல்லு கிராம மக்கள் அங்குசென்று, அந்த நபர்களை மாடு பிடித்து மாடு கடத்தும் கும்பல் என நினைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 3 பேர் பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துல்லு கிராமத்தைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரின் வழக்கு செலவுகளுக்கான பணத்தை தான் செலுத்தப் போவதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகந்த் துபே தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட முடிவு என்றும், 4 பேரையும் அநியாயமாக போலீசார் கைது செய்திருப்பதாகவும் கூறினார்.

    ‘ஒட்டுமொத்த கிராமமே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. திருட்டு போன மாடுகளின் உரிமையாளர்கள் என்பதற்காக 4 பேரை மட்டும் தனிமைப்படுத்தி கைது செய்திருப்பது ஏன்?’ என்றும் துபே கேள்வி எழுப்பி உள்ளார்.

     நிஷிகந்த் துபே, கோட்டா மக்களவைத் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #JharkhandLynching
     
    Next Story
    ×