என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேஜர் கோகாய்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் - ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உறுதி
    X

    மேஜர் கோகாய்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் - ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உறுதி

    ராணுவ மேஜர் லீதுல் கோகாய் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உறுதியளித்துள்ளார். #MajorGogoi #GeneralBipinRawat
    புதுடெல்லி:

    இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாகிஸ்தான் ராணும் தொடச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனா பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நாம் அமைதியை விரும்புகிறோம். ஆனால் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. மக்கள் அமைதியாகவும், மகிழ்சியாகவும் வாழ ராணுவம் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடாமல் உள்ளது. இதே சூழ்நிலை நீடிக்க அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், நாமும் தாக்குதல் நடத்துவோம்.

    ராணுவத்தில் தவறு செய்யும் வீரர்களுக்கு தண்டனை கண்டிப்பாக வழங்கப்படும். அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் சரி. மேஜர் கோகாய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டும். அவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

    என தெரிவித்தார்.

    சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் மேஜர் லீதுல் கோகாய் சென்றுள்ளார். ஆனால், அந்த பெண் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், ஓட்டல் நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை அடுத்து, கோகோய் மற்றும் அவரது டிரைவர் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.

    போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், கோகோயை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #MajorGogoi #GeneralBipinRawat

    Next Story
    ×