என் மலர்
செய்திகள்

ராஜஸ்தானில் மக்களால் நடத்தப்படும் ரெயில் நிலையம்
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தை அக்கிராம மக்களே நடத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ராஷித்பூரா கோரி என்ற ரெயில்நிலையம் உள்ளது. கடந்த 2015 ஆண்டு அங்கு ஏற்பட்ட ரெயில் விபத்திற்கு பிறகு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இரும்புப்பாதையை அகலப்படுத்துவதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ரெயில்வே துறைக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மூன்று மாதங்களுக்கு மட்டும் ஒரே ஒரு ரெயில் ஓடும் அதன்பின் ரெயில் போக்குவரத்து சரிசெய்யப்படும் என கூறினர்.

கிராம மக்கள் அதனை ஒப்புக்கொண்டனர். மூன்று மாதத்திற்கு பிறகும் போக்குவரத்து சரிசெய்யப்படவில்லை. அதனால் அதற்கென தனி குழு அமைத்து மக்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பெற்றனர். அதைப்பயன்படுத்தி ரெயியில் செல்வதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர். பொதுமக்கள் பயணச்சீட்டு வாங்கிய பிறகே ரெயிலில் பயணம் செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அங்குள்ள பள்ளி ஆசிரியர் சிகார் ரெயில் நிலையத்திலிருந்து டிக்கெட்டுகளை வாங்கி அதனை கிராமத்தில் வந்து விற்பார். சிறிது லாபத்துடன் விற்று வருகிறார். இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து புகார் ஏதும் வரவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் மக்களால் ரெயில் நிலையம் நடத்தப்படுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story