என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க முடிவா? மறுக்கும் மத்திய மந்திரி
    X

    கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க முடிவா? மறுக்கும் மத்திய மந்திரி

    இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக மத்திய மந்திரி விளக்கமளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக மத்திய மந்திரி விளக்கமளித்துள்ளார்.

    இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இதற்கு, மத்திய அரசை விமர்சித்து கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக கேரளாவில் நெட்டிசன்கள் இதனை கிண்டல் செய்து மீம்களை வெளியிட்டனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் படால் தனது ட்விட்டர் விளக்கமளித்துள்ளார். டெல்லியில் நாளை உணவு கருதரங்கு தொடங்க உள்ளது. இதற்காக இந்திய உணவுத்துறை சார்பில் கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்கும் வகையில் சுமார் 800 கிலோ கிச்சடி தயாரிக்க திட்டமிட்டுள்ளது. கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்கும் திட்டமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×