என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் இன்று தீர்ப்பு?
    X

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் இன்று தீர்ப்பு?

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்தவர் பெனாசீர் பூட்டோ. பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் ஆவார். பிரதமராக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார். முதல் முறை பதவி பவித்தபோது ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 20 மாதங்களுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 1993ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதேபோன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, 1996ல் நீக்கப்பட்டார். பின்னர் 1998-ல் தானே முன்வந்து தானே முன்வந்து நாடு விட்டு துபாய் சென்றார்.

    2007ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். பின்னர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது, அத்துடன் அவர் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டன. பின்னர் 27 டிசம்பர் 2007-ல் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் பங்கேற்ற போது வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த கொலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப்பிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முஷாரப் மீதான விசாரணை தனியாக நடைபெற உள்ளது.
    Next Story
    ×