என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
    X

    ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

    பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பால், ஏழைய எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் எனவே இந்த அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

    மத்திய அரசின் கொள்ளை முடிவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை போக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்பது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×