என் மலர்

  செய்திகள்

  பஞ்சாபில் போலி ரூ.2000 நோட்டுகளுடன் 2 பேர் கைது
  X

  பஞ்சாபில் போலி ரூ.2000 நோட்டுகளுடன் 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சாபில் போலி ரூ.2000 நோட்டுகளுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

  சண்டிகர்:

  இந்தியாவில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

  வழக்கமான ரூபாய் நோட்டுகளை விட புதிய ரூ2 ஆயிரம் நோட்டுகள் வடிவத்திலும், வண்ணத்திலும் முற்றிலும் மாறுபட்டு உள்ளது.

  புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு போல கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாது என்றும், அந்த அளவுக்கு அதில் புதிய நவீன தொழில் நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு கூறியது. ஆனால் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகமான மறுநாளே கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் ஒருவர் அந்த நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

  இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஹர்ஜிந்தர்சிங், சந்தீப்சிங் என்ற 2 பேர் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை கண்காணித்த போலீசார் நேற்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

  அமிர்தசரசில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிசிவிண்ட் எனும் ஊரில் ரகசிய இடத்தில் அவர்கள் இருவரும் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் தயாரித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலில் அவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்துள்ளனர்.

  பிறகு அதை ஏராளமாக பிரிண்ட் எடுத்து நவீன கட்டிங் எந்திரம் மூலம் வெட்டி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு போலவே மாற்றி விட்டனர். புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்களிடம் இன்னமும் சகஜமாக பயன் பாட்டுக்கு வராததால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கள்ள நோட்டு தயாரித்து பணம் சம்பாதிக்க அவர்கள் முயன்றதாக கூறினார்கள்.

  ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை ஏராளமாக தயாரித்த ஹர்ஜிந்தர்சிங்கும், சந்தீப் சிங்கும், மார்க்கெட்டில் அளவுக்கு அதிகமாக கடைகளில் புழக்கத்துக்கு விட்டனர். அவர்களிடம் மட்டும் எப்படி கத்தை கத்தையாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வந்தன என்று கடைக்காரர்கள் ஆச்சரியப்பட்டனர்.

  அப்போதுதான் அவர்கள் வினியோகிப்பது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்தனர். போலீசார் அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு தயாரிக்க பயன் படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கேனிங் மெஷின், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×