என் மலர்

    செய்திகள்

    பழைய ரூபாய் நோட்டுக்களை டிச.30 வரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்: சிவசேனா
    X

    பழைய ரூபாய் நோட்டுக்களை டிச.30 வரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்: சிவசேனா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற டிசம்பர் 30-ந்தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் நோட்டுக்களை பயன்படுத்தவும் டிச.30-ந்தேதி வரை அனுமதி அளிக்க வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது.
    500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கடந்த புதன்கிழமையில் இருந்து செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் இந்த இரண்டு வகை நோட்டுக்களையும் மாற்றி வருகிறார்கள். போதுமான அளவு மாற்று பணம் இல்லாததால் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டுவிட்டன.

    இதனால் மக்கள் பணத்திற்காக, குறிப்பாக 100 ரூபாய் நோட்டுக்காக படாதபாடு படுகின்றனர். உ.பி., ம.பி. மற்றும் ஹரியானாவில் வங்கி மற்றும் ரேஷன் கடைகள் சூறையாடும் அளவிற்கு மக்கள் சென்றுவிட்டனர்.

    இதனை கட்டுப்படுத்த டிசம்பர் 30-ந்தேதி வரை பழைய நோட்டுக்களை மாற்ற சலுகை வழங்கியதுபோல், அவற்றை பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து சிவசேனா கட்சியின் யுவா சேனா பிரிவின் தலைவர் ஆதித்யா தாக்கரே மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கட்சி சார்பில் டுவிட்டர் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ‘‘500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30-ந்தேதி வரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே, அரசின் நடவடிக்கையை விமர்சித்த சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ், ‘‘பிரதமருக்கு தைரியம் இருந்தால், இந்தியர்கள் கருப்பு பணத்தை கொண்டு வருவதற்கு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் வங்கிக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்தட்டும்’’ என்று சவால்விட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×