என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை
    X

    காஷ்மீரில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துவருவதாக தெரியவந்துள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கண்டி டிரக்முல்லா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.

    இதை அறிந்ததும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் ஜம்முவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×