என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பிரதமர் இல்ல சாலையின் பெயர் மாற்றம்
    X

    டெல்லியில் பிரதமர் இல்ல சாலையின் பெயர் மாற்றம்

    டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்திருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை இன்று லோக் கல்யாண் மார்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    டெல்லி:

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி நகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி வசிக்கும் அதிகாரப்பூர்வ அரசு இல்லம் அமைந்திருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயரை லோக் கல்யாண் மார்க் என மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ரேஸ் கோர்ஸ் சாலை இன்று முதல் லோக் கல்யாண் மார்க் என அழைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

    விரைவில் புதிய பெயருடன் கூடிய பெயர் பலகை பிரதமர் இல்ல சாலையை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரேஸ் கோர்ஸ் சாலையை “ஏகாத்மா சாலை” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×