என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்ய மறுத்த பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய வாலிபர்
    X

    திருமணம் செய்ய மறுத்த பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய வாலிபர்

    டெல்லியில் நேற்று வாலிபர் ஒருவர் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை 22 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தார். அதே போன்ற இன்னொரு சம்பவமும் டெல்லியில் நடந்துள்ளது.
    புதுடெல்லி:

    காதலிக்க மறுப்பவர்களை கொலை செய்வது அல்லது கொலை செய்ய முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

    டெல்லியில் நேற்று வாலிபர் ஒருவர் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை 22 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தார். அதே போன்ற இன்னொரு சம்பவமும் டெல்லியில் நடந்துள்ளது.

    டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும், டெல்லியை சேர்ந்த அமித் என்ற வாலிபருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். அந்த பெண் அழகு கலை நிபுணராக இருந்தார்.

    இருவரும் அடிக்கடி பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

    இந்த நிலையில் அமித் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். இது சம்பந்தமாக அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், அந்த பெண் இதை ஏற்கவில்லை. அமித் வேலை எதுவும் இல்லாமல் இருந்தார். மேலும் கெட்ட பழக்க வழக்கங்களும் இருந்தன. எனவே, அவரை திருமணம் செய்ய அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், தொடர்ந்து அமித் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தார்.

    இதனால் அமித்துடன் உள்ள தொடர்பை அவர் துண்டித்தார். இதில், ஆத்திரம் அடைந்த அமித் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தார்.

    அவருடைய வீடு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தது. அங்கு வந்து தகராறு செய்த அமித், அந்த பெண்ணை தூக்கி மாடியில் இருந்து கீழே வீசினார்.

    இதில், அவருக்கு கை- காலிலும், முகத்திலும் எலும்பு உடைந்தது. ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அந்த பெண்ணை தூக்கி வீசியதுமே அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அமித்தை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
    Next Story
    ×