search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்
    X

    ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெய்ப்பூர்-டெல்லி இடையில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    தேசிய நெடுஞ்சாலை 8 அல்லது என். எச் 8 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.

    இந்த நெடுஞ்சாலை மாநில தலைநகரங்களான காந்திநகர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் முக்கிய நகரங்களான குர்க்கான், அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இச்சாலையின் மொத்த நீளம் 1428 கிமீ ஆகும்.

    இந்நிலையில், ஜெய்ப்பூர்-டெல்லி இடையில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

    டெல்லி-ஜெய்ப்பூர் இடையிலான இந்த சாலையில் 440 கிலோமீட்டர் சர்வீஸ் பாதைகளும், 20 மேம்பாலங்களும் கட்டப்பட உள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ராஜ்யவர்தன் ரத்தோர், மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி மற்றும் ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

    கடந்த 2 வருடங்களாக இதற்காக பல்வேறு கட்ட முயற்சிகள் நடைபெற்று வந்ததாக கூறினார்.
    Next Story
    ×