என் மலர்
செய்திகள்

மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டம்: விளக்கம் கேட்கிறார் ஜனாதிபதி
புதுடெல்லி:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மே 1–ந்தேதி முதல் கட்ட நுழைவுத்தேர்வு நடந்தது. 2–வது கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை மாதம் 24–ந்தேதி நடக்கிறது.
பொது நுழைவுத் தேர்வு நடத்த தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்தது. ஓராண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் முடிவை மந்திரி சபை கூட்டத்தில் எடுத்தது. இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க சிபாரிசு செய்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் மந்திரிசபை கூட்டத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை என்றும் திட்டமிட்டபடி நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும் மத்திய சகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறினார்.
என்றாலும் மத்திய அரசு அவசர சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சட்டம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மத்திய சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளார். மேலும் சட்ட நிபுணர்களுடனும் ஜனாதிபதி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசு சிபாரிசை ஏற்று ஜனாதிபதி ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால்தான் தற்போது அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.






