என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் காந்தியடிகளின் பேரனுடன் பிரதமர் மோடி பேச்சு
    X

    டெல்லியில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் காந்தியடிகளின் பேரனுடன் பிரதமர் மோடி பேச்சு

    மகாத்மா காந்தியடிகளின் பேரன் கனுபாய் ராம்தாஸ் காந்தி தன் மனைவியுடன் வயதான காலத்தில் தங்க வீடு இன்றி அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியடிகளின் 3-வது மகனான ராம்தாஸ் காந்தியின் 3 மகன்களில் ஒருவர் கனுபாய் காந்தி (வயது 87) இவர் தனது மனைவி ஷிவ லக்‌ஷ்மியுடன் டெல்லியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவர் குஜராத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தற்போது டெல்லியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

    நம் தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியின் பேரன், நிரந்தர வீடு கூட இல்லாமல் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் புகைப்படம் ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி கனுபாய் காந்தியுடன் உரையாடி நலம் விசாரித்தார். மேலும் மத்திய மந்திரி மகேஷ் சர்மாவை நேரடியாக முதியோர் இல்லத்திற்கு சென்று சந்திக்கும்படி அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து மகேஷ் சர்மா கனுபாய் காந்தியை சந்தித்து அவருக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    Next Story
    ×