என் மலர்
செய்திகள்

பீகார், ஜார்க்கண்டில் நடந்த பத்திரிகையாளர்கள் கொலைக்கு அருண் ஜெட்லி கண்டனம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்தேவ் ரஞ்சன் மற்றும் அகிலேஷ் பிரதாப் சிங் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி :
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்த அகிலேஷ் பிரதாப் சிங் என்பவர் அங்குள்ள சத்ரா மாவட்டத்தில் மர்ம நபர்களால் கடந்த 12-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதைப்போல இந்துஸ்தான் பத்திரிகையின் இந்தி பதிப்பில் பணியாற்றி வந்த ராஜ்தேவ் ரஞ்சன் என்பவரை பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
இந்த கொலைகள் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த கொலைகளுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், ‘பத்திரிகையாளர்களான ராஜ்தேவ் ரஞ்சன் மற்றும் அகிலேஷ் பிரதாப் சிங் ஆகியோர் கொலைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கொலைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story