என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னையா குமார் மீதான தேச விரோத குற்றச்சாட்டால் பா.ஜ.க இளைஞர்கள் ஆதரவை இழக்கும்: சிவசேனா
    X

    கன்னையா குமார் மீதான தேச விரோத குற்றச்சாட்டால் பா.ஜ.க இளைஞர்கள் ஆதரவை இழக்கும்: சிவசேனா

    ஜே.என்.யு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னையா குமாரை தேச விரோதியாக சித்தரித்ததால், பா.ஜ.க. இளைஞர்களின் ஆதரவை இழக்கலாம் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.
    நாசிக்:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது, கன்னையா குமாரை தேச விரோதியாக சித்தரித்ததால், பா.ஜ.க. இளைஞர்களின் ஆதரவை இழக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.

    மேலும் தாக்கரே பேசியதாவது:-

    கன்னையா குமாரை இந்த உலகிற்கு ஈன்றெடுத்தவர்கள் யார் என்பது முதலில் முக்கியம்? அரசு அது குறித்து ஆலோசிக்க வேண்டும். அவர் தேச விரோதி என்று தவறாக முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

    இது போன்று தேச விரோத முத்திரை குத்தினால் அவர்களால் நாட்டிற்காக சுதந்திரமாக செயல்பட முடியாது. இதனால் பாரதீய ஜனதா கட்சி தனக்கான ஆதரவை இழந்து விடும்.

    நம்முடைய நாட்டில் இளைஞர்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். அதனால் மத்திய அரசு மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பாரதீய ஜனதா ஆதரவாளர் ஒருவர் கன்னையா குமாரின் கழுத்தை நெரிக்க முயற்சி செய்த சம்பவத்தை தொடர்ந்து உத்தவ் தாக்கரே இந்த கருத்தினை கூறியுள்ளார்.

    Next Story
    ×