என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் பறவை காய்ச்சலுக்கு 2 வயது சிறுமி பலி
    X

    ஆந்திராவில் பறவை காய்ச்சலுக்கு 2 வயது சிறுமி பலி

    • பொதுமக்கள் பறவை காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது.
    • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலம் பல் நாடு மாவட்டம் நரசராவ் பேட்டையை சேர்ந்தவர் 2 வயது சிறுமி. இவருக்கு கடந்த மாதம் 4-ந்தேதி காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் இருந்து நீர் வடிதல், வயிற்றுப்போக்கு மற்றும் வலிப்பு வந்தது.

    சிறுமியை அவர்களது பெற்றோர் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    சிகிச்சையின் போது தொண்டை மற்றும் மூக்கில் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறுமியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் 24-ந்தேதி புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி எச்பி5என்1 பறவை காய்ச்சல் நோயால் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாநில அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறுமி இறந்த ஊருக்கு சென்று விசாரணை நடத்தினர் .

    அப்போது சிறுமி செல்ல பிராணிகள் மற்றும் தெரு நாய்களுடன் விளையாடியது தெரியவந்தது. மேலும் சிறுமிக்கு காய்ச்சல் வருவதற்கு 2 நாள் முன்பாக கோழி கறிக்கடையில் வேக வைக்காத கோழிக்கறி துண்டு சாப்பிட்டதாக கூறினார்.

    இதன் காரணமாக சிறுமிக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொதுமக்கள் பறவை காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உஷாராக இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட கறிகளை சாப்பிடக்கூடாது.

    கோழி கறிகளை 100 டிகிரி செல்சியசில் வேக வைத்து சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×