என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளிக்கூடத்தின் ஒரு சுவற்றில் 4 லிட்டர் பெயிண்ட் அடிக்க 233 பேரா? இது என்னடா கணக்கு..!
    X

    பள்ளிக்கூடத்தின் ஒரு சுவற்றில் 4 லிட்டர் பெயிண்ட் அடிக்க 233 பேரா? இது என்னடா கணக்கு..!

    • ஒரு சுவற்றுக்கு 4 லிட்டர் பெயிண்ட் அடிக்க 1.07 லட்சம் ரூபாய் செலவு.
    • 10 ஜன்னல், 4 கதவுகளுக்கு 20 லிட்டர் பெயிண்ட் அடிக்க 2.3 லட்சம் ரூபாய் செலவு.

    மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு பள்ளிகளில் பார்த்த வேலைகளுக்கான பில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இப்படியும் கணக்கு எழுத முடியுமா? என வினோத கேள்வியை எழுப்பியுள்ளது.

    ஷஹ்டோல் மாவட்டத்தில் உள்ள சகண்டி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் சுவரில் 4 லிட்டர் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை 168 ஊழியர்கள், 65 கொத்தனார்கள் செய்துள்ளனர். 1.07 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என பில் போடப்பட்டுள்ளது. இந்த பில்லை பள்ளி தாளாளர் மதிப்பீடும் செய்துள்ளார்.

    நிபானியா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள 10 ஜன்னல்கள், 4 கதவுகளுக்கு 20 லிட்டர் பெயிண்ட் அடிக்கப்பட்டதாகவும், இதற்காக 275 வேலையாட்கள் மற்றும் 150 கொத்தனார்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×