என் மலர்

  செய்திகள்

  வாவ் சொல்ல வைக்கும் எல்ஜி G6 (வீடியோ)
  X

  வாவ் சொல்ல வைக்கும் எல்ஜி G6 (வீடியோ)

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்ஜி G6 ஸ்மார்ட்போனின் டியூரபிலிட்டி டெஸ்ட் (உறுதி தன்மை) வீடியோவினை எல்ஜி வெளியிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வெளியான இந்த வீடியோ இண்டர்நெட் டிரெண்ட் ஆகும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
  சியோல்:

  எல்ஜி சமீபத்தில் வெளியிட்ட ஃபிளாக்‌ஷிப்  ஸ்மார்ட்போனான G6 சிறப்பம்சங்களை விளக்கும் வீடியோ இண்டர்நெட் டிரெண்ட் ஆகியுள்ளது. எல்ஜி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் வித்தியாசமான டியூரபிலிட்டி வழிமுறைகளை போன்று படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பார்க்க மற்ற டியூரபில்லிட்டி டெஸ்ட்களை போன்று இல்லாமல் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

  இந்த வீடியோவில் பல்வேறு எல்ஜி G6 ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நிறங்களில் ஒவ்வொரு சிறப்பம்சங்களை கச்சிதமாக விளக்கும் வகையில் இந்த வீடியோ நகர்கிறது. இரண்டறை நிமிட வீடியோவில் ஸ்மார்ட்போன் நீரில் விழுவது, அதிக வெப்பத்தை தாங்குவது, பேட்டரி ஆப்ஷன் மற்றும் கேமரா திறன் உள்ளிட்டவைகளை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

  வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ள எல்ஜி G6 கீழே விழுந்தாலும் அதிகப்படியான கீறல்கள் ஏற்படாத வளைந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது. வரும் வாரங்களில் எல்ஜி G6 சர்வதேச விற்பனை துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

  எல்ஜி வெளியிட்டுள்ள டியூரபிலிட்டி டெஸ்ட் வீடியோவை இங்கு காணலாம்..,


  Next Story
  ×