search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    கடலூர் எம்எல்ஏ பாஜகவில் இணைய திட்டமா?  வலைத்தளங்களில் பரவும் வதந்தி
    X

    கடலூர் எம்எல்ஏ பாஜகவில் இணைய திட்டமா? வலைத்தளங்களில் பரவும் வதந்தி

    • திமுகவில் இருந்து அய்யப்பன் எம்எல்ஏ தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
    • சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வருவதாக விளக்கம்

    கடலூர் சட்டமன்ற உறுப்பினர், கோ.அய்யப்பன், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கடலூர் மாநகராட்சி தேர்தலின் போது திமுக கட்சிக்கு எதிராக மாற்று வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக கட்சி தலைமை இதுவரை முடிவு எடுக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில், அய்யப்பன் எம்எல்ஏ பாரதிய ஜனதா கட்சிக்கு செல்ல உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி என விளக்கம் அளித்துள்ளார் அய்யப்பன் எம்எல்ஏ.

    'தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் மக்கள் பணியை மும்முரமாக செய்து வருகிறேன். தற்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. அது முழுக்க முழுக்க வதந்திதான். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன்' என்றார்.

    Next Story
    ×