search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    இது நொய்டா சர்வதேச விமான நிலையமா? வைரலாகும் புகைப்படம்

    நொய்டாவில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையம் இப்படி தான் காட்சியளிக்கும் என கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


    நவம்பர் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். உத்திர பிரதேச மாநிலத்தின் ஜெவார் பகுதியில் இந்த விமான நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விமான நிலையம் ஆசியாவில் மிகப்பெரிய ஏரோ-டிரோம்களில் ஒன்றாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

    இந்த விமான நிலையத்திற்கான முதற்கட்ட பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றன. இந்த நிலையில், விமான நிலையம் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் படத்தில் இருப்பது நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் மாதிரி என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே புகைப்படத்தை செய்தி நிறுவனங்கள், பா.ஜ.க. சமூக வலைதள பக்கங்கள் பகிர்ந்து வருகின்றன.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது தென் கொரியாவில் உள்ள இன்சியான் சர்வதேச விமான நிலைய புகைப்படம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றிய செய்தி குறிப்புகளும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. செய்தி குறிப்புகளின்படி இந்த புகைப்படம் நவம்பர் 5, 2017 ஆம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×