என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசியல் கட்சி பிரமுகர் கொலை விவகாரம்: இறுதி ஊர்வலத்தின் போது கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு
    X

    அரசியல் கட்சி பிரமுகர் கொலை விவகாரம்: இறுதி ஊர்வலத்தின் போது கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு

    • நீடாமங்கலம் கடை தெருவில் ராஜ்குமாரின் உடலை வைத்து வளரும் தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடைத்தெருவில் உள்ள கடைகளை உடைத்தும் காவல்துறை வாகனங்களை தாக்கியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் நேற்று முன்தினம் திருவாரூர் அருகே உள்ள கமலாபுரம் என்கிற இடத்தில் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கொலை நடந்த 12 மணி நேரத்தில் காவல் துறையினர் 5 முக்கிய கொலை குற்றவாளிகளை கைது செய்தனர். தொடர்ந்து ராஜ்குமாரின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு உடலை அமரர் ஊர்தியில் வைத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட வளரும் கட்சியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    இதனையடுத்து ராஜ்குமாரின் சொந்த ஊரான நீடாமங்கலம் கடை தெருவில் ராஜ்குமாரின் உடலை வைத்து வளரும் தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைத்தெருவில் உள்ள கடைகளை உடைத்தும் காவல்துறை வாகனங்களை தாக்கியும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

    இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வளரும் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் பாலை பட்டாபிராமன், மாநிலப் பொருளாளர் ஆரோக்கிய செல்வம் உள்ளிட்ட 30 பேர் மீதும், கலவரத்தில் ஈடுபட்டதாக 10 பேர் மீதும் நீடாமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பொது சொத்தை சேதப்படுத்துதல், தகாத வார்த்தைகளால் தீட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×