என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி பெண் பலி
- கணவன்-மனைவி இருவரும் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் உள்ள உறவினர் சீமந்தம் நிகழ்ச்சியில் பங்கேற்க ரெயிலில் திரிசூலம் வந்தனர்.
- தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
காஞ்சிபுரம் அடுத்த மணப்பாக்கம், தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கலைச்செல்வி (வயது40).கணவன்-மனைவி இருவரும் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் உள்ள உறவினர் சீமந்தம் நிகழ்ச்சியில் பங்கேற்க ரெயிலில் திரிசூலம் வந்தனர். பின்னர் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது கலைச்செல்வி கால் இடறி கீழே விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள் அவ்வழியே வந்த ரெயில் மோதியது. இதில் கணவரின் கண்முன்பே கலைச்செல்வி பலியானார். இதனை பார்த்து அவரது கணவர் சம்பத் கதறி துடித்தார். இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






