என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் மனைவி தலையில் குழவி கல்லை போட்டு கொன்ற கணவன்

- கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நம்பிகுளம் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 35). இவரது மனைவி செண்பகம் (32). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவி இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறை காரணமாக கேரளாவில் இருந்து நம்பி குளத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி செண்பகத்தின் தலையில் குழவி கல்லை போட்டு பச்சை முத்து துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.
பச்சமுத்து வீட்டில் இருந்து ஓடுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் செண்பகம் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த எலவனாசூர் கோட்டை போலீசார் செண்பகத்தின் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.