என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்போரூரில் பஸ் மோதி தொழிலாளி பலி
- திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் (வயது 55 ) உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்ந நிலையில் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும்போது தொழிலாளி சண்முகம் இயற்கை உபாதை கழிக்க சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த தனியார் பஸ் திடீரென சண்முகம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார் விரைந்து வந்து பலியான சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






