என் மலர்
உள்ளூர் செய்திகள்

அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- அகவிலைப்படி உயர்வு குறித்து நீதிமன்ற தீர்ப்பை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநில பொதுச்செயலாளர் கே.கந்தன் தலைமையில் போராட்டம் நடந்தது.
- நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
சென்னை:
போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகவிலைப்படி உயர்வு குறித்து நீதிமன்ற தீர்ப்பை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநில பொதுச்செயலாளர் கே.கந்தன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து கே.கந்தன் கூறியதாவது:-
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியால் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 86 ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
2015 நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகளை நடத்தி தீர்ப்பாணை பெற்றுள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்.
அதில் நவம்பர் 2022 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை நிறைவேற்ற வேண்டும் என இப்போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.