search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அசுத்தம் செய்வதை தவிர்க்க சுவரில் ஓவியம்- புதுவை நகராட்சி அதிரடி
    X
    புதுவை கம்பன்கலையரங்க சுவரில் நகராட்சி சார்பில் வரையப்பட்ட ஓவியங்கள், கூடையில் வைக்கப்பட்டுள்ள மூலிகை செடிகள்.

    அசுத்தம் செய்வதை தவிர்க்க சுவரில் ஓவியம்- புதுவை நகராட்சி அதிரடி

    • சாலையில் சுற்றுலா பேருந்துகள் நிறுத்தப்படுவதாலும், இரவில் இருள் சூழ்ந்துள்ளதாலும் சாலையோரங்களில் சிலர் அசுத்தம் செய்து வருகின்றனர்.
    • சுற்றுச்சுவரில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ கடவுள்களின் படங்கள், இயற்கை, விழிப்புணர்வு ஓவியங்கள், சுவரில் தொங்கும் ஜாடியில் மூலிகை செடி அமைத்து இடத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கம் அருகில் செல்லும் சின்னசுப்புராயப்பிள்ளை சாலை வழியாக பழைய பஸ்நிலையம், தாவரவியல் பூங்கா, ரெயில் நிலையம், உப்பளம் பகுதிக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

    இந்த சாலையில் சுற்றுலா பேருந்துகள் நிறுத்தப்படுவதாலும், இரவில் இருள் சூழ்ந்துள்ளதாலும் சாலையோரங்களில் சிலர் அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் இச்சாலை துர்நாற்றத்துடன் அசுத்தமாக உள்ளது.

    இதை சரிசெய்யும் வகையில் நகராட்சி சார்பில் கம்பன் கலையரங்கின் சுற்றுச்சுவரில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ கடவுள்களின் படங்கள், இயற்கை, விழிப்புணர்வு ஓவியங்கள், சுவரில் தொங்கும் ஜாடியில் மூலிகை செடி அமைத்து இடத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இது அப்பகுதியில் செல்வோரை ஈர்த்து வருகிறது.

    Next Story
    ×