என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார்- பா.ஜ.க. மகளிர் அணி தலைவி பேச்சு
- மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க சந்திப்பு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
- விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியது விளையாட்டுத்தனமாக உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால மத்திய அரசின் சாதனை விளக்க சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு நலத்திட்டங்கள்
தென்காசி மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலை வகித்தார். இதில் பாரதீய ஜனதா கட்சி மாநில மகளிரணி தலைவி உமாரதி கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 9 ஆண்டு காலமாக பாரதீய ஜனதா கட்சி அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளது. இருளில் இருந்த இந்தியாவை பிரதமர் மோடி மீட்டு ஒளி பெற செய்துள்ளார். அவர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து ள்ளார்.
ரூ. 9.5 லட்சம் கோடி
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே அவர் இந்த திட்டங்களை அளித்துள்ளார். தமிழகத்திற்கு ரூ. 9.5 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். தமிழகத்தில் இருந்து அகில இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு யாரும் அனுப்பப் படவில்லை என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்டபோது தகவல் பரிமாற்றம் சரியான அளவில் கிடைக்கவில்லை என்று கூறியது விளையாட்டுத்தனமாக உள்ளது.
கர்நாடக தேர்தலில் அடுத்த முறை பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் ஒருமுறை அ.தி.மு.க. அடுத்த முறை தி.மு.க. என்பது போன்று கர்நாடகத்திலும் உள்ளது. வருகிற பாராளு மன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துலட்சுமி, முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் குத்தாலிங்கம், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ரங்கராஜ், ஊடகப்பிரிவு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் குமார், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர்கள் மாரிசாமி, ராமர், குரு கிருஷ்ணா உள்ளிட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.






