என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்க  அழைப்பு
    X

    மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூயமல்லி ரகங்கள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது.
    • சமயம் விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் பெற்று பயன் பெறலாம்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக ''நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின்'' கீழ் பாரம்பரிய விதை நெல்லான -கருப்புக்கவுணி மற்றும் தூயமல்லி ரகங்கள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது. அது சமயம் விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் பெற்று பயன் பெறலாம்.

    மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விதை நெல்லான டி.கே.எம்-13 மற்றும் ஆர்.என்.ஆர்-15048 ரகங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது. இந்த விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் இதனையும் 50 சதவீத மானிய விலையில் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அந்த அந்த பகுதியிலுள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகியோ பயன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×