search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிஆர் பாண்டியன்
    X
    பிஆர் பாண்டியன்

    விவசாய அமைப்பு தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

    விவசாயிகள் அமைப்புகளின் முன்னணி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
    செங்கல்பட்டு:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செங்கல்பட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டதில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காட்டாங்கொளத்தூரில் வருகிற 3, 4, 5-ந் தேதிகளில் சென்னை அக்ரி எக்ஸ்போ-2022,மாநாடு, கருத்தரங்கம், எந்திர கண்காட்சி, பாரம்பரிய வேளாண் மற்றும் உணவு திருவிழா, பாரம்பரிய வைத்திய முறைகள், வீரக்கலைகள் குறித்தான பன்முகத்தன்மை கொண்ட வகையில் மாநாடு நடைபெற உள்ளது,

    டெல்லியில் ஓராண்டு காலம் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் மீது கர்நாடக மாநிலத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்தி கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இதன் பின்புலம் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். திட்டமிட்டு ராகேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது சந்தேகம் அளிக்கிறது.

    மத்திய அரசின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகள் ஒன்று படுவதை தடுக்கும் நோக்கத்தோடு, அச்சுறுத்தும் வகையிலும் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு, விவசாயிகள் அமைப்புகளின் முன்னணி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×