என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாஷிங்மிஷின் எரிந்து உருக்குலைந்து கிடக்கும் காட்சி.
வாஷிங்மிஷின் எரிந்து கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு
அருப்புக்கோட்டையில் வாஷிங்மிஷின் எரிந்து கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலையம்பட்டி
அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியில் ராஜேஷ் என்பவர் வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி வருவதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது வாஷிங் மிஷின் எரிந்து கொண்டு இருந்தது.
இதன் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். விசாரணையில் வாஷிங் மிஷின் மீது துணியை போட்டு விட்டு மின்சாரம் துண்டிக்காததால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
இந்த தீ விபத்து காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






