என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்
    X
    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்

    சோளிங்கரில் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம்

    சோளிங்கரில் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    சோளிங்கர், 

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களை வெற்றி பெற‌செய்த கிளைக் கழக நிர்வாகிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட அவைத்தலைவர் அசோகன், கலந்துகொண்டு ஜூன் 3-ந் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் சிறப்பாக கொண்டாட வேண்டும். 

    சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களை வெற்றி பெற‌ செய்து கழக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட கிளைக் கழக நிர்வாகிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார். 

    அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது மாவட்ட சுற்றுச்சூழல் அணி வேதா சீனிவாஸ் மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைகழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×