என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
  X
  நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

  எதிர் கட்சிகளின் பொய் பிரச்சாரம் நீண்ட நாள் நீடிக்காது- அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரதீய ஜனதா கட்சி இன்று அபிரிதமான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதற்கு காரணம் பா.ஜனதா மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான்.
  புதுச்சேரி:

  புதுவை பா.ஜனதா மாநில, மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜனதா பட்டியலின தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.

  பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பட்டியல் பணி பொறுப்பாளர் அசோக்பாபு எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர் செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு பட்டியல் அணி நிர்வாகிகளுக்கு பொறுப்புக்கான நியமனம் கடிதத்தை வழங்கினர்.  இதில் கலந்துகொண்டு அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

  பாரதீய ஜனதா கட்சி இன்று அபிரிதமான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதற்கு காரணம் பா.ஜனதா மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான். நாளுக்கு நாள் பா.ஜனதா வளர்ந்து கொண்டே உள்ளது. ஒரு காலத்தில் பா.ஜனதா மக்கள் விரோதமான கட்சி என எதிர்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்தனர்.

  ஆனால் உண்மையை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக சிறுபான்மை சமூக மக்கள் பட்டியலின மக்கள் பா.ஜனதாவால் மட்டுமே இந்திய நாட்டிற்கும் புதுவைக்கும் விடியலை கொடுக்க முடியும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.  பிரதமர் நரேந்திர மோடி மத்திய பா.ஜனதா ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு என்னென்ன செய்திருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக பா.ஜனதா ஆட்சியில் சலுகைகள் எல்லாம் பறிபோய்விடும் என்று எண்ணுகிறார்கள். அப்படி இல்லை. 

  இது எதிர்க்கட்சிகளால் வேண்டுமென்றே பரப்பப் படும் பொய்ப்பிரச்சாரம் என்பதனை மக்கள் மத்தியிலே குறிப்பாக பட்டியல் இன மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். பட்டியல் இன மக்களையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் உயர்த்திப் பிடிக்கின்ற கட்சி பாரதீய ஜனதா கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

  இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.கே.சி.கஜேந்திரன், மூத்த வக்கீல் அம்மாவாசை, கங்கைஅமரன் சுப்பிரமணி,  அய்யப்பன், ராஜேஸ்வரி, பொதுச் செயலாளர் மணியம்மை, நாகராஜன் பொருளாளர் டாக்டர். சிவபெருமான், மாநில செயலாளர்கள் அருள், அருண்குமார், பிரகாஷ், ராஜா, வக்கீல் சிவகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், கார்த்தி, காமாட்சி, தீனன், சத்தியமூர்த்தி, ராஜாராம், தட்சிணாமூர்த்தி, சமூக வலைதள பிரிவு அமைப்பாளர் அருள்குமார், பட்டியலின அணி வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ணரசன், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு அம்பேத்கர், நகர மாவட்ட தலைவர் வெற்றிவேல், காரைக்கால் மாவட்ட தலைவர் கஜேந்திரன், அரியாங்குப்பம் மாவட்டத் தலைவர் வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×