என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ தடுப்பு குறிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்ற போது எடுத்த படம்
அரக்கோணம் அருகே தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு
அரக்கோணம் அருகே தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெமிலி:
அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான வீரர்கள், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய உபகரணங்களை பயன்படுத்தும் விதம், எதிர்பாராதவிதமாக தீப்பற்றினால் அதனை எவ்வாறு கையாண்டு தீயை மேலும் பரவாமல் தடுப்பது என்பது பற்றிய செயல்விளக்கம் செய்து காண்பித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் திடீரென ஏற்படும் தீ விபத்தை தடுக்க பதட்டப்படாமல் செயல்பட வேண்டும் எனவும் கூறினர்.
Next Story






