என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த காட்சி.
    X
    துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த காட்சி.

    10, 12 ம் வகுப்பு வினாத்தாள் வைக்கும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    அரக்கோணத்தில் 10, 12 ம் வகுப்பு வினாத்தாள் வைக்கும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கல்வி மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 16 உயர்நிலை மற்றும் 15 மேல்நிலை அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் நடைபெற உள்ள 10-வது மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரசு பொது தேர்வு வினாத்தாள்கள் அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    வினாத்தாள் காப்பாளர்களான அரக்கோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சுஜாதேவி, சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ரகு, உதவி தலைமையாசிரியர்கள் அருட்செல்வன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். 

    வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள பள்ளியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×