என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையம் திறப்பு

    கீழப்பழுவூரில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையம் திறக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கடைவீதியில் இருந்த காவல் நிலையம், பழுதடைந்ததால், திடீர் குப்பம் பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதையடுத்து, காவல்நிலைய புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

    சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
    இதையடுத்து, அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலைய புதிய கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.
       
    Next Story
    ×