என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெமிலி ஒன்றியக்குழு கூட்டம் நடந்ந போது எடுத்த படம்.
மகளிர் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க தீர்மானம்
நெமிலி ஒன்றியக்குழு கூட்டத்தில் மகளிர் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர்கல் கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
முக்கியமாக கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் முன்கூட்டியே அவசரகால நடவடிக்கையாக எடுக்கப்பட வேண்டும் என ஒன்றியக்குழு சேர்மன் வடிவேலு தெரிவித்தார்.
மேலும் நெமிலியில் மகளிர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story






