என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாணாவரத்தில் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.
    X
    பாணாவரத்தில் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

    பாணாவரத்தில் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

    பாணாவரத்தில் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கவரை தெருவில் -ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

    இக்கோவில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும். கடந்த சில மாதங்களாக ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவிலை புனரமைப்பு பணிகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு கோ பூஜையும், 6 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    பிறகு பிற்பகல் 1 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு சீனிவாச பெருமாள் சமேதராய் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பஜனை குழுவினரால் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடப்பட்டது. 

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×