என் மலர்
உள்ளூர் செய்திகள்

முட்புதரில் ரேசன் அரிசி மூட்டைகள் உள்ள காட்சி.
காவேரிப்பாக்கம் அருகே முட்புதரில் பதுக்கிய 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்
காவேரிப்பாக்கம் அருகே முட்புதரில் பதுக்கிய 4 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்ததுபவர்களை பிடிக்க குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு சென்னை கோட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் காவேரிப்பாக்கம் அருகே துறை பெரும்பாக்கம் மாகானிப்பட்டு செல்லும் சாலை அருகே முட்புதரில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு ஆய்வாளர் சதீஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு சென்று சோதனை நடத்திய போது 4 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை அங்கு பதுக்கியவர்கள் யார் என்று வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story






