என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில்  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் போது எடுத்த படம்.
    X
    ராணிப்பேட்டையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் போது எடுத்த படம்.

    ராணிப்பேட்டையில் வருகிற 12-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

    ராணிப்பேட்டையில் வருகிற 12-ம் தேதி தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு பயிற்சித் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. 

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற மாணவ மாணவிகளுக்கு 8-ம் வகுப்பு முதல் பொறியியல் மற்றும் பட்டப்படிப்புகள் வரை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக இந்த முகாம் நடைபெற உள்ளது. 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. 

    சுமார் 10 ஆயிரம் பேர் பங்கு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கும், வேலை வேண்டி விண்ணப்பித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×