என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சியில் புத்தூர் மங்கொண்டான் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை கல
வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ரெட்டிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் புத்தூர் மங்கொண்டான் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி.
ரூ.9.92 லட்சம் மதிப்பீட்டில் விஸ்வனேரி வரத்து வாய்க்காலில் தூர்வாரும் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் கசவனேரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் தூர்வாரும் பணி,
14- வது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியினையும், தேளுர் ஊராட்சியில் ரூ.9.74 லட்சம் மதிப்பீட்டில் மண்ணுளி நைனேரி வரத்து வாய்க்காலில் தூர்வாரும் பணி ஆகிய பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீடு கட்டும் பணிகள் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையினை பணிகள் முடிய விரைவாக வழங்கிட அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா, உதவி பொறியாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story






