என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆற்காட்டில் அரிசி வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.5 லட்சம் பறிமுதல்
ஆற்காடு அருகே அரிசி வியாபாரியிடம் ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு:
ஆற்காடு கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 48). அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் திமிரி - அண்ணாநகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த ஜனார்த்தனனை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் ஆவணங்களின்றி ரூ.5 லட்சம் எடுத்து வந்தது தெரிந்தது.
அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உரிய ஆவணங்களை காண்பித்து எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினர்.
பின்னர் பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பொறுப்பாளர் ஏழுமலையிடம் ஒப்படைத்தனர்.
Next Story






