என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்த காட்சி.
    X
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்த காட்சி.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 42 பறக்கும் படை கண்காணிப்பு

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களை கலெக்டர் தொடங்கிவைத்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் பகுதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் பறக்கும் படைகள் தலா 3 குழுக்கள் என மொத்தம் 42 பறக்கும் படை குழுக்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்த பறக்கும் படை வாகனத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

    அப்போது அவர் கூறுகையில்:- 

    காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு குழுவும், பிற்பகல் 2 மணி வரை இரவு 10 மணி வரை ஒரு குழுவும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு குழுவும் என 3 குழுக்கள் ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் சோதனை பணிகளில் ஈடுபட உள்ளனர் என்றார்.
    Next Story
    ×