என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து முனிரத்தினம் எம்.எல்.ஏ. பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து முனிரத்தினம் எம்.எல்.ஏ. பார்வையிட்ட போது எடுத்த படம்.

    ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், பூங்கா திறப்பு

    சோளிங்கர் பாண்டியநல்லூரில் ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சியில் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரகுராம்ராஜு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஊராட்சி மன்ற துணை தலைவர் அரி அனைவரையும் வரவேற்றார். சோளிங்கர் எ.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.

    மேலும் 14 பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார். 
    Next Story
    ×