என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து சமாதான புறாக்களை பறக்கவிட்டார்.
    X
    ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து சமாதான புறாக்களை பறக்கவிட்டார்.

    ராணிபேட்டையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

    ராணிபேட்டையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியேற்றி நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 73-வது குடியரசு தின விழா முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றிவைத்து சமாதான புறாக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா,   ஆகியோர் பறக்கவிட்டனர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர், எஸ்.பி ஆகியோர் காவல் துறையின் அணிவகுப்பவை பார்வையிட்டு தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
    மொத்தம் 338 பேருக்கு  பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். 

    இதனைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 96 ஆயிரத்து 184 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.  

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×