என் மலர்
செய்திகள்

தேங்காய் கொப்பரை
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2¼ டன் தேங்காய்-கொப்பரை விற்பனை
கொப்பரை 27 மூட்டைகள் வரத்து இருந்தது. எடை 921 கிலோ. விலை கிலோ ரூ.65.10 முதல் ரூ.107.15 வரை விற்பனையானது.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.25 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.
3,673 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 1,213 கிலோ. கிலோ ரூ.27.50 முதல் ரூ.32.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.30.85. விற்பனைத் தொகை ரூ.37 ஆயிரத்து 309.
கொப்பரை 27 மூட்டைகள் வரத்து இருந்தது. எடை 921 கிலோ. விலை கிலோ ரூ.65.10 முதல் ரூ.107.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.98.35. விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரத்து 153. 40 விவசாயிகள், 11 வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.
தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 2.25 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.23 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.
Next Story






