search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆய்வு பணியில் ஈடுபட்ட கலெக்டர் வினீத்.
    X
    ஆய்வு பணியில் ஈடுபட்ட கலெக்டர் வினீத்.

    பி.ஏ.பி., வாய்க்காலில் கலெக்டர் ஆய்வு

    திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி.வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் சகுந்தலாதேவி (வயது 14) என்ற சிறுமி கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    அவரது உடலை தீயணைப்பு படையினர் தேடியும் மீட்க முடியவில்லை. இதையடுத்து திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி.வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து பல்லடம், திருப்பூர்,காங்கேயம் தீயணைப்பு படையினர், காவல் துறை, வருவாய் துறையினர் இணைந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் அச்சிறுமியின் உடலை தேடினர். இந்தநிலையில் அலகுமலை கிராமம் ராமம்பாளையம் அருகில் உள்ள அமுக்கு பாலம் பகுதியில் சிறுமியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

    இதனிடையே கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.வி.வாய்க்கால் மற்றும் காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் வி.கள்ளிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட போலீஸ் எஸ்.பி. சசாங்சாய், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஒன்றிய தலைவர் குமார், துணைத்தலைவர் அபிராமி அசோகன், ஊராட்சி தலைவர் சாந்தினி சம்பத்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×