என் மலர்
செய்திகள்

பெரம்பலூர் வீராங்கனைக்கு போலீசார் ஊக்கத்தொகை வழங்கிய காட்சி
சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்கும் பெரம்பலூர் வீராங்கனைக்கு போலீசார் ஊக்கத்தொகை
என்ஜினீயரிங் கல்லூரி மாணவி நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 18). தந்தை ரோவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியான இவர் நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
இந்நிலையில் பிரியதர்ஷினியை ஊக்குவிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியபிரகாசம் ரூ.10 ஆயிரமும், மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி ரூ.5 ஆயிரமும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story






