search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிருமாம்பாக்கம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது வாலிபருக்கு பாட்டில் குத்து

    கிருமாம்பாக்கம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பாட்டில் குத்து விழுந்தது.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது மகன் ரஞ்சித் (வயது19). கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்த போது ரஞ்சித் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த அமர்நாத் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது இரு தரப்பி னரையும் பொதுமக்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ரஞ்சித் அப்பகுதியில் முருகன் கோவில் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அமர்நாத் மற்றும் அவரது நண்பர்களான அருண், அரவிந்த், முகேஷ் மற்றும் அமர்நாத்தின் தந்தை முருகையன் ஆகியோர் தடி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் ரஞ்சித்தை தகாத வார்த்தை களால் திட்டி ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் பாட்டிலாலும் குத்தினர்.

    இதனால் ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததை பார்த்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து தகவல் அறிந்த ரஞ்சித்தின் நண்பர் கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரஞ்சித் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக பிள்ளையார்குப்பம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு மீண்டும் மோதல் சம்பவம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    Next Story
    ×