என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    வெள்ளகோவிலில் தென்னைநார் மில்லை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

    பி.ஏ.பி. பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடி மில்லுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் பி.ஏ.பி. பாசன உதவி பொறியாளர் பாஸ்கர் புகார் மனு கொடுத்துள்ளார்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஒன்றியம் ஓலப்பாளையம் அருகே பொன்பரப்பி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான தென்னைநார் காயர் மில் உள்ளது. பி.ஏ.பி. கிளை பாசன வாய்க்காலில் இருந்து மில் நிர்வாகத்தினர் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர்.

    தென்னைநார் காயர் மில்லினால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. காற்று மாசுபடுகிறது. இதனால் மில்லை நிரந்தரமாக மூட வேண்டும், மின் இணைப்பை உடனே துண்டிக்க வேண்டும். 

    மில்லினால் சிகாரிபுரம், பொன்பரப்பி பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னைநார் காயர் மில் முன்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து காங்கயம் தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் காங்கேயம் தாசில்தார் சிவகாமி, நில வருவாய் அலுவலர் நிர்மலாதேவி, பி.ஏ.பி. பாசன உதவி பொறியாளர் பாஸ்கர், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று  ஆய்வு மேற்க்கொண்டனர். 

    இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதன் பேரில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலைந்து சென்றனர். 

    இந்தநிலையில் பி.ஏ.பி. பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடி மில்லுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் பி.ஏ.பி. பாசனத் உதவி பொறியாளர் பாஸ்கர் புகார் மனு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×